ஆப்கனில் பிபிசி பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

May 01, 2018

ஆப்கானிஸ்தானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் அகமது ஷா சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோஸ்ட் மாகாணத்தில் காபூல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி பத்திரிகையாளர் அகமது ஷா கொல்லப்பட்டுள்ளார்.

செய்தி சேகரித்து பின் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அகமது ஷாவை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

அண்மையில் காபூல் அருகேயுள்ள ஷாஷ் தர்க்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 25ஆம் தேதிஇ காந்தகாரில் அப்துல் மனன் ஆர்கண்ட் என்ற மற்றொரு பத்திரிகையாளரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உலகம்