ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது

April 06, 2018

ஆபாசப்பட நடிகைக்கு எனது சட்டத்தரணி பணம் வழங்கியது குறித்து  எனக்கு எதுவும்  தெரியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்டோர்மி டானியல் என்ற ஆபாசப்பட நடிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே டிரம்ப் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.

2016 ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டிரம்பின் சட்டத்தரணி மைக்கல் கோகன் தனக்கு 130,000 அமெரிக்க டொலர்களை வழங்கினார் என அந்த நடிகை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறிப்பிட்ட நடிகை டிரம்ப் தன்னுடன் உறவுவைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் சட்டத்தரணி பணம் வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் டிரம்பிற்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே டிரம்ப் இதனை மறுத்துள்ளார்.

உலகம்