ஆண் ஒருவரை இரண்டு முறை பாலியல் பலத்காரம் செய்த இளம்பெண்

March 09, 2017

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் ஆண் ஒருவரை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

Tyne and Wear-ன் South Shields பகுதியை சேர்ந்த 26 வயதான Katie Brannen என்ற பெண்ணே இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள Katie Brannen நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நீதிபதி Katie Brannenனின் பெயரை உறுதி செய்ய மட்டுமே அனுமதி அளித்தார்.

Katie Brannen வழக்கறிஞரோ, தன்னுடைய மனுதாரர் குற்றமற்றவர் என்றும், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய விசாரணை திகதியை குறிப்பிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதி, வழக்கின் விசாரணை திகதியை டிசம்பர் 4ம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செப்டம்பர் 25ம் திகதி நடைபெறும் மறுவிசாரணையின் போது Katie Brannen நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதுடன், Katie Brannen-க்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கியுள்ளார்.

 

ஐரோப்பா