ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் எருது: அப்படி என்ன சிறப்பு?

March 01, 2017

ஹரியானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் வளர்த்து வரும் எருதால் ஆண்டுக்கு அவர் ரூ.50 லட்சம் அவரை சம்பாதித்து வருகிறார்.

ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவைச் சேர்ந்த கரம்வீர் சிங். இவர் தமது குழந்தையை போன்று எருது ஒன்றை வளர்த்து வருகிறார்.

யுவராஜ் என பெயரிடப்பட்டுள்ள அந்த எருதுக்கு தினமும் 20 லிற்றர் பால், ஆப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள் உணவு. 5 கி.மீ. நடைபயிற்சி என தீனிக்காக மட்டும் தினமும் ரூ.3000 முதல் ரூ.4000 வரை செலவிடுகிறார் கரம்வீர்.

மட்டுமின்றி யுவராஜிடமிருந்து ஒரு முறை 10 முதல் 14 மி.லி. வரை விந்து எடுக்கப்படுகிறது. அதை அறிவியல்பூர்வமாக நீர்க்க செய்து 700 முதல் 900 ‘டோஸ்’கள் வரை மாற்றப்படுகிறது.

அதை சினைக்காக பயன்படுத்த வழங்குவதாக கூறும் கரம்வீர், ஒரு டோஸை ரூ.500-க்கு தன்னால் விற்க முடியும் என்றும் ஆனால், சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலைக்கே யுவராஜின் விந்துவை விற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆண்டுக்கு சராசரியாக ரூ.50 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், அந்தப் பணத்தை கொண்டு தமது குடும்பத்தினர் வைத்துள்ள மற்ற கால் நடைகளை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாக கரம்வீர் தெரிவித்துள்ளார்.

9 வயதான யுவராஜ் தற்போது 150 கிலோ எடையுடன் 5.8 அடி உயரத்துடன் இருப்பதால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இதை ரூ.9.25 கோடிக்கு வாங்கவும் சிலர் முன்வந்துள்ளனர். ஆனால், யுவராஜை விற்க மறுத்துள்ளார் கரம்வீர் சிங்.

 

உலகம்