அவுஸ்திரேலியா விசாவில் அதிரடி மாற்றம்!

November 18, 2016

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசாவில் அதிரடியான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக 457 விசா என்ற திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதன்படி, வேலை ஒப்பந்தம் முடிந்த பின்னர் அடுத்த வேலையை தேடுவதற்காக 90 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும்.

இந்த அவகாசத்தை 60 நாட்களாக குறைத்துள்ளதாக குடியேற்றத்துறை அமைச்சர் பீட்டர் பட்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலிய குடிமகன்களுக்காக வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியா