அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது தண்ணீரில் சிக்கிய ஏலியன் உயிரினம்?

January 14, 2017

அவுஸ்திரேலியாவில் பெய்த பலத்த மழையின் போது ஏலியன் போன்ற ஒரு உயிரினம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கன மழை பெய்தது. இதனால் Kintore நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணமாக அந்நகரத்திற்கு அருகே உள்ள உள்ளுரா தேசிய பூங்கா மூடப்பட்டது.

அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்டதால் பூங்காவில் இருந்த சில அரிய வகை உயிரினங்கள் சிலவற்றை அந்த வெள்ளத்தில் காணமுடிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதைப் பயன்படுத்தி Finke Gorge தேசிய பூங்காவில் உள்ள கிடங்குகளில் வித்தியாசமான முறையில் இருக்கும் இறால்களை கண்டுபிடிக்க நல்ல சந்தர்ப்பம் என்ற முயற்சியில் அங்குள்ள் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

அப்போது தான் இறால் போன்று மீன் அமைப்புடைய ஒரு உயிரினம் தென்பட்டுள்ளது. அதை ஆராய்ந்து பார்க்கையில் இது இறால் இல்லை என்றும், இது இரட்டை வால்களை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி வேற்று கிரகவாசிகள் இருப்பதைப் போன்ற தலைபாகத்தை கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதனுடைய தோற்றமும், இறாலின் தோற்றமும் ஒரே போன்று தான் உள்ளது. இருப்பினும் இது தன் உடல்கள் முழுவதும் பெரிய கவசத்தைப் போன்று கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்த உயிரினத்தை காத்து அதன் முட்டையை எடுத்து ஆராய்ச்சி செய்த பின்னரே இதன் தகவல் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைப்பு: 
அவுஸ்திரேலியா