அவுஸ்திரேலியாவில் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

January 14, 2017

அவுஸ்திரேலியாவில் கன்வேயர் விபத்தில் அயர்லாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சிக்கிய வழக்கில் குறித்த நிறுவனத்திற்கு ரூ. 31 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்தை சேர்ந்தவர் Annie Dunne. இவர் அவுஸ்திரேலியாவில் ஒரு பேரிக்காய் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அங்கு இருந்த 2 கன்வேயரில் ஒரு கன்வேயரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவரது தலைமுடி அதில் சிக்கி பெரிய விபத்தில் சிக்கினார்.

இதில் அவரது தலைமுடி அப்படியே பிய்ந்து போனதுடன், அவர் தன்னுடைய ஒரு காதையும் இழந்தார். இந்த விபரீத சம்பவம் 2015ம் ஆண்டு நவம்பர் 7ம் திகதி நடந்தது

இது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குறித்த நிறுவனத்திற்கு ரூ. 31 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், சட்ட செலவுகளுக்கான தொகையாக ரூ. 5 லட்சமும் அந்நிறுவனத்திற்கு விதித்துள்ளது.

அவுஸ்திரேலியா