அம்பாந்தோட்டை சீனாவுக்கு வழங்க அனுமதி!

July 25, 2017

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, இந்த புதிய உடன்பாட்டுக்கு அமைய, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

துறைமுக நிர்வாகம் தொடர்பான விவகாரங்களுக்காக உருவாக்கப்படும் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகள் சிறிலங்காவிடம் இருக்கும்.

அதேவேளை, துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக உருவாக்கப்படும் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகள் சீன நிறுவனத்திடம் இருக்கும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தீவு