அமெரிக்க மேயர் தேர்தலில் வெற்றிப்பெற்ற WWE கதாநாயகன் கெய்ன்

May 05, 2018

பகீர் கிளப்பும் முகமூடி, அதில் ஓரமாக கொடூரத்துடன் பார்க்கும் கண். இது தான் டபுள்யூ.டபுள்யூ.இ களத்தில் கொடிக்கட்டி பறந்த கெய்னின் அடையாளம். 90-களில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு கெய்ன் ஒரு சூப்பர்ஸ்டார்.

கிளவுன் தாமஸ் ஜேக்கப்ஸ் என்ற இயற்பெயரை கொண்ட கெய்ன் மரண அடி ரெஸ்லிங்க் போட்டிகளிலும் பிரபலமாக இருந்தார். ரெஸ்லிங்க் ரிங்கிற்குள் இவர் வந்தாலே எதிர்முனை போட்டியாளர்கள் தெறித்து ஓடுவார்கள்.

கெயினின் அதிரடியான சண்டைகளும் ஆக்ரோஷமான அடிதடிக்கும் எதிரிகள் மீது அவர் தொடுக்கும் தாக்குதல்களும்இ ரிங்க் களத்தில் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல்இ தொலைக்காட்சி வழியாக பார்க்கும் ரசிகர்களையும் அது குதூகலப்படுத்தும்.

ரெஸ்லிங்க் களத்திற்கு பிறகு ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்த கெய்ன் தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் நாக்ஸ் கவுண்டி நகரத்திற்கான மேயர் பதவிக்காக களம்கண்ட கெய்ன் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் முடிவுகள் வெளியான போது அதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட சுமார் 17 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்று நாக்ஸ் கவுண்டி நகர மேயராக வாகை சூடியுள்ளார் கெய்ன் என்கிற கிளவுன் தாமஸ் ஜேக்கப்ஸ்.

டபுள்யூ.டபுள்யூ.இ ரெஸ்லிங்க் போட்டிகளில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த கெய்ன் அரசியலில் இறங்கிய பிறகு அதுவே அவருக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுதந்தது. தற்போது அந்த பிரபலம் தான் கெய்னை நாக்ஸ் கவுண்டி மேயராக வெற்றிப்பெறச் செய்துள்ளது.

இதற்கிடையே தேர்தலில் தன்னை வெற்றிப்பெற செய்தவர்கள் மத்தியில் கெய்ன் பேசும்போது ஹஹஎனக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வரலாற்று வெற்றியை வெல்ல உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி எனது குழுவினால் தான் சாத்தியமானது. பொதுத் தேர்தலிலும் வெற்றியை எதிர்நோக்குகிறோம்” என உருக்கமாக கூறினார்.

உலகம்