அமெரிக்கா வணிக வளாக துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

May 04, 2018

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் டென்னிசி நகருக்கு உட்பட்ட நாஷ்வில்லே பகுதியில் ஆப்ரி மில்ஸ் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.

இந்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் உடனடியாக போலீசில் சரணடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில்இ இருவரும் சுமார் 22 வயது மதிக்கத்தவர்கள் எனவும்இ இரு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம்