அமெரிக்கா போர் தொடுத்தால்? இதுதான் வட கொரியாவின் திட்டம்

April 17, 2017

வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க நேர்ந்தால் தென் கொரியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கடத்த கிம் அரசு சிறப்பு வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா தீபகற்பத்தில் போர் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் கிம் அரசின் அதிர வைக்கும் திட்டங்கள் சில கசிந்த வண்ணம் உள்ளது.

இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதுடன் தங்கள் நாட்டு பயணைகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

முன்னேற்பாடு நடவடிக்கையாக சீனா அரசு தங்கள் நாட்டில் இருந்து வட கொரியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த வெள்ளியன்று வட கொரியாவில் இருந்து கடைசி விமானம் சீனா தலைநகர் பீஜிங் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை உருவானால் தென் கொரியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கடத்தி வர சிறப்பு படை ஒன்றை கிம் அரசு தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த தகவல்களை வெளியிட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், அதிர வைக்கும் தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் அரசு வட கொரிய ஜனாதிபதியை கொல்லாமல் பதவி நீக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டால் அது கண்டிப்பாக அமெரிக்காவுக்கு தலைவலியாக முடியும்.

ஜனாதிபதி கிம் உயிருடன் இருக்கும் வரை வட கொரியாவை வெற்றிகொள்ளும் சாத்தியம் மிக மிக குறைவு எனவும் அந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு படையில் ஒரு குழுவினர் உடனடியாக உயிரை மாய்த்துவிடும் கொடிய விஷத்துடன் களமிறங்க உள்ளனர். இதே பாணியில் தான் மலேசியாவில் தமது சகோதரரை தீர்த்துக்கட்டினார் கிம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகம்