அமெரிக்கா நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு- 17 பேர் காயம்!

July 01, 2017

அமெரிக்கா நாட்டின் தென்பகுதியில் உள்ள அர்கன்சாஸ் மாகாணம், லிட்டில் ராக் பகுதியில் நைட் கிளப் உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் இசைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இதைதொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் அங்குமிங்கும் அலறியபடி ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து லிட்டில் ராக் பகுதி போலீசார் கூறுகையில், “இரு நபர்களுக்கிடையே நடந்த விவாதம் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம். காயமடைந்த 17 பேரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை’’ என தெரிவித்தனர்.

உலகம்