அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் : பொலிசாருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

April 01, 2017

6 வயது சிறுவனை சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மார்க்ஸ்வெல்லி பகுதியில் Chris Few என்பவர் தனது ஆறு வயது மகன் Jeremy Mardis உடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது பொலிசார் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு வயது மகன் Jeremy Mardis பரிதாபமாக பலியானார். Chris Few படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில் தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில் 6 வயது சிறுவனை சுட்டு கொலை செய்த Derrick Stafford என்ற பொலிசாருக்கு நீதிமன்றம் 55 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

 

 

கனடா