அமெ­ரிக்­கா­வின் நிபந்­த­னையை கிம் ஜோங் உன் ஏற்­கா­வி­டில் வெளி­ந­டப்­பு

April 20, 2018

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் – வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் இரு­வ­ருக்­கும் இடை­யில் அடுத்த மாதம் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில், ‘‘அணு­வா­யு­தங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்­கா­வின் நிபந்­த­னையை கிம் ஜோங் உன் ஏற்­கா­வி­டில் நான் பேச்­சில் இருந்து வெளி­ந­டப்­புச் செய்­வேன்’’ என்று தெரி­வித்­தார் டொனால்ட் ட்ரம்ப்.

பன்­னாட்­டுச் சட்­ட­திட்­டங்­களை மீறி தொடர்ந்து ஆயுத, அணு­வா­யு­தச் சோத­னை­களை நடத்­தி­வந்­தது வட­கொ­ரியா. இத­னால் வட­கொ­ரி­யா­மீது ஐ.நா. சபை கடும் பொ­ரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­தி­ருந்­தது.

அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா, ஜப்­பான் ஆகி­ய­ன­வும் தனித்­த­னி­யாக தடை­களை விதித்­தி­ருந்­தன. தென்­கொ­ரி­யா­வில் அணி­மை­யில் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் கலந்­து­கொண்­டதை அடுத்து வட­கொ­ரி­யா­வுக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இணக்­கம் ஏற்­பட்­டது.

‘‘தென்­கொ­ரி­யா­வு­டன் பகையை மறந்து புதிய அத்­தி­யா­யம் எழு­தத் தயார்’’ என்று கிம்­ஜோங் உன் அறி­வித்­தார். ‘‘அமெ­ரிக்­கா­வு­டன் பேச்சு நடத்­தத் தயார்’’ என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இதை­ய­டுத்தே அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் -– கிம் ஜோங் உன் இடை­யி­லான சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

அடுத்த மாதம் இந்­தச் சந்­திப்பு பொது­வா­ன­தொரு இடத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த நிலை­யில், ‘‘எமது அணு­வா­யுத நிபந்­த­னை­களை வட­கொ­ரியா ஏற்­றுக் கொள்­ளா­விட்­டால் வெளி­ந­டப்­புச் செய்­வேன்’’ என்று ட்ரம்ப் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தார்.

‘‘நான் முன்பு கூறி­யதை போல, அணு­சக்­திப் பயன்­பாட்டை வட கொரியா முழு­மை­யாக நீக்­கி­ விட்­டால், அது அந்த நாட்­டிற்கு மட்­டும் அல்­லா­மல் இந்த உல­கத்­திற்­கும் சிறந்த நாளாக அமை­யும். அணு­வா­யு­தத்தை வட­கொ­ரியா முழு­மை­ யா­கக் கைவி­டும் வரை­யில் அந்த நாட்­டுக்கு எதி­ராக அழுத்­தங்­கள் தொட­ரும்’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

உலகம்