அனுஷ்காவிற்கு தூது விடும் இந்திய கிரிக்கெட் வீரர்

February 25, 2016

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி முறிந்து போன தனது காதலை மீண்டும் தொடர அனுஷ்கா சர்மாவின் சகோதரர் மூலம் தூது அனுப்பி வருகின்றாராம். இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியின் ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்நிலையில் கோஹ்லி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது ஆசையை அனுஷ்காவிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சல்மான் கானுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு வந்ததால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கோஹ்லி அந்த படத்தில் நடக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் சல்மான் பட வாய்ப்பை எப்படி விடுவது என்று அவர் கோஹ்லியின் விருப்பத்திற்கு எதிராக அதில் நடித்து வருகிறார். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களின் காதல் முறிந்தது.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுடனான காதலை மீண்டும் தொடரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் கோஹ்லி. இதற்காக அனுஷ்கா சர்மாவின் சகோதரர் உதவியை நாடியுள்ளார்.இது பற்றி கோஹ்லிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ”கோஹ்லி மீண்டும் அனுஷ்காவுடன் சேர விரும்புகிறார். இதற்காக அவரின் சகோதரர் உதவியை நாடியுள்ளார். தான் அனுஷ்காவுடன் சேருவேன் என்று அவர் உறுதியாக நம்புகிறார்” என்று கூறியுள்ளார்.

பலதும் பத்து