மரண அறிவித்தல்

திரு இரத்தினம் நாகேஸ்வரன்

கொழும்புத்துறை விபுலானந்தர் வீதி

                                                                                                                                      

 

யாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் நாகேஸ்வரன் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா(ஆசிரியர்- யாழ். கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிஜந்தன்(யாழ்/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்), துளசிகா(யாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீஸ்வரி, கமலேஸ்வரி, நகுலேஸ்வரன், திலகேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற கணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகலிங்கம், குணசீலன், அமிர்தலிங்கம், புஸ்பராஜ், அருள், துரையய்யா, மோகனா, சத்தியதேவி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 16,
விபுலானந்தர் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776454276
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770711110
நிஜந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94787103448
அருள் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19736994049
வினோதினி — ஜெர்மனி
தொலைபேசி: +4920150763493
சத்தியதேவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447222691