மரண அறிவித்தல்

திருமதி நடராசா முத்துலட்சுமி

வவுனியா மாகாறம்பைக்குளம்

                                                                                                                                     

 

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாகாறம்பைக்குளம் குடியேற்ற திட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா முத்துலட்சுமி அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கலா(சுவிஸ்), மதி(சுவிஸ்), கிளி(வவுனியா), கண்ணன்(சுவிஸ்), அப்பன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, ஐயாத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம், சிவக்கொழுந்து, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார்(ஜெர்மனி), தவராசா(வவுனியா), அன்ரன்(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்), மாலினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேபி, தேவதாஸ், தனுஸா, பவா, கிருஸ்ணகுமார், ராஸ்குமார், மதுஸா, மிருஸா, அனுஸா, நிதுஸன், நிஸாசி, நிந்துஸா, அம்பிருதா, அனுஸன், பாலன், லக்சினி, சசிதரன், குணசீலன், பிரியா, வாணி, மாந்தன், தினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவ்வியா, செல்வியா, அமிந்தா, நிஸா, குயிலினி, தமிழினி, மதிலி, பிருந்தா, கபிலன், வானுஸா, அஸ்வின், சகானா, கன்சிகா, யனுசன், அகல்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கண்ணன் குடும்பம்
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791713525
கண்ணன் குடும்பம் — இலங்கை
தொலைபேசி: +94242050990