மரண அறிவித்தல்

திருமதி ஜெயபாலரத்தினம் சீதாலக்‌ஷ்மி

யாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணை

                                                                                            

 

யாழ். ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலரத்தினம் சீதாலக்‌ஷ்மி அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயபாலரத்தினம்(ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயதர்சினி(ஆசிரியர்), ஜெனார்த்தனன்(லண்டன்), ஜெயகணேஷ்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாகீசன்(ஆணையாளர்- மாநகரசபை), ஜெயரஜனி(லண்டன்), சுஜாந்தினி(யாழ். உதவி அரசாங்க முகாமைத்துவ உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பேல் மடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212223691
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466832613